பட்டதாரி நேர்முகத் தேர்வுக்கு யாழ்ப்பாண மாவட்டத்தில் 668 பேர் தோற்றவில்லை!

Monday, April 30th, 2018

யாழ்ப்பாண மாவட்டத்தில் நேர்முகத் தேர்வுக்காக அழைக்கப்பட்ட பட்டதாரிகளில் 668 பட்டதாரிகள் நேர்முகத் தேர்வுக்குத் தோற்றவில்லை என மாவட்டச் செயலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகள் என அரச தலைவர் செயலகம் மற்றும் மாவட்டச் செயலகங்களில் பதிவு செய்த மொத்தம் 4 ஆயிரத்து 326 பட்டதாரிகள் நேர்முகத் தேர்வுக்காக மாவட்டச் செயலகத்தால் அழைக்கப்பட்டனர்.

இவ்வாறு அழைக்கப்பட்ட 4 ஆயிரத்து 326 பட்டதாரிகளுக்காகவும் கடந்த 18 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரையில் நேர்முகத் தேர்வுகள் இடம்பெற்றன. இதற்காக 3 ஆயிரத்து 658 பட்டதாரிகள் தோற்றியிருந்தனர்.

இவ்வாறு நேர்முகத் தேர்வுக்குத் தோற்றிய 3 ஆயிரத்து 658 பட்டதாரிகளில் 821 பட்டதாரிகள் 2017 ஆம் ஆண்டுக்கான பட்டதாரிகளாகக்  காணப்படுவதோடு மேலும் சிலருக்கு ஆவண ரீதியில் சான்றுகள் அற்ற தன்மையும் காணப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் அரசால் கோரப்பட்ட காலத்துக்குட்பட்ட 2016.12.30 க்கு முன்பு பட்டம் பெற்ற பட்டதாரி நியமனத்துக்கு தகுதியுடையவர்களாக யாழ்ப்பாணக் குடாநாட்டில் 2 ஆயிரத்து 691 பேர் இனங்காணப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.

Related posts:

ஓகஸ்ட் முதலாம் திகதிமுதல் உக்காத இலன்ஸ் சீட் வகைகளை விற்பனை செய்ய மற்றும் பயன்படுத்த தடை - அமைச்சர் ...
அடுத்த நான்கு வருடங்களில் 47 இலட்சம் குடும்பத்தினருக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக் கொடுப்பதே அரசாங்க...
கடந்த ஆண்டை விடவும் 2023 ஆம் ஆண்டுப் புத்தாண்டு சுமூகமாக அமைந்துள்ளது – மேலும் சிறப்பானதாக அனைவரும் ...