பட்டதாரிகள் நியமனத்தில் போராளிகளுக்கு முன்னுரிமை – வடமாகாண ஆளுநர் !

பட்டதாரிகள் நியமனத்தில் போராளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என
வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே தெரிவித்துள்ளார்.
வாரம்தோறும் புதன்கிழமைகளில் வடமாகாண ஆளுநர் சுண்டுக்குளியில் அமைந்துள்ள
அலுவலகத்தில் மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை தீர்த்து வைக்கும்
வேலைத்திட்டத்தினை செய்து வருகின்றார்.
நேற்றையதினமும் காலை-09 மணி முதல் சமூக மட்ட அமைப்புக்கள், கிராம
அபிவிருத்தி சங்கங்கள், விவசாய சம்மேளனப் பிரதிநிதிகள் அரச ஊழியர்கள்,
தொண்டர் ஆசிரிய சங்க பிரதிநிதிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பட்டோர்
ஆளுநரைச் சந்தித்து தமது கோரிக்கை கடிதங்களை கையளித்தனர்.
அவர்களின் பிரச்சினைகளுக்கு உரிய அதிகாரிகளுடன் தொலைபேசி ஊடாக தொடர்பு
கொண்ட ஆளுநர் தம்மிடம் தெரிவிக்கப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் கவனம்
செலுத்தி உரிய பதில் வழங்குமாறு பணிப்புரை விடுத்தார்.
Related posts:
பாரிய வருமானத்தை ஈட்டியுள்ளது கொழும்புத் துறைமுகம்!
டெங்கு நுளம்புகளை ஒழிக்க ஜேர்மன் தொழில்நுட்பம் - சுகாதார அமைச்சர்!
2021 ஆம் ஆண்டுக்கான பாடசாலை கற்றல் நடவடிக்கைகள் 150 நாட்களாக குறைப்பு - - கல்வி அமைச்சர் பேராசிரியர...
|
|