பட்டதாரிகளை இணைத்துக்கொள்வது தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் மாகாண மட்டத்தில் – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவிப்பு!

Sunday, July 30th, 2023

புதிய பட்டதாரிகளை இணைத்துக்கொள்வது தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் மாகாண மட்டத்தில் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், விஞ்ஞானம், தொழிநுட்பம், ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள் ஆகிய பாடங்களுக்கு புதிய பட்டதாரிகளை இணைத்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நீதிமன்றத்தின் தடை உத்தரவு காரணமாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களை இணைப்பது தாமதமாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பபிடத்தக்கது.

000

Related posts: