பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனம் – நீதியான தீர்வு விரைவில் வழங்கப்படும் – அடுத்த வாரம் அமைச்சரவை பத்திரம் என அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவிப்பு!

Wednesday, July 10th, 2024

பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்குதல் தொடர்பில் நீதியான தீர்வைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கல்வியமைச்சர் சுசில் பிரேம ஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தள்ளார்.

இது தொடர்பான இறுதிப்பத்திரத்தை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பித்து, நீதிமன்ற இணக்கப்பாட்டையும் பெறவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கில் உள்ள பட்டதாரிகளுக்கான தொழில் வாய்ப்பு தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்ன? என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில் கேள்வி எழுப்பினார். இதற்கு விரிவான பதிலளித்த கல்வி அமைச்சர் –

கடந்த அரசாங்கங்களின் காலத்தில் வேலையற்ற பட்டதாரிகளுக்கு இரண்டு தடவைகளில் நியமனங்கள் வழங்கப்பட்டன. முதலாவது 2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் அதனை மேற்கொண்டது. அதன் போது ஒரே தடவையில் 40 ஆயிரம் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்பட்டது. அவர்கள் பல்வேறு ரீதியாக அரச நிறுவனங்களில் இணைக்கப்பட்டனர்.

இதன் பின்னர் 2019 ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்சவின் காலத்தில் இரண்டாவது தடவையாக 52,000 பேருக்கு நியமனம் வழங்கப்பட்டது. இவர்கள் அரசாங்க நிறுவனங்களில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்டனர். கல்வியமைச்சை நான் பொறுப்பேற்ற போது இருந்த நிலைமையே இது.

இறுதியாக அமைச்சர் பேராசிரியர் ஜீ .எல்.பீரிஸ் அமைச்சரவைக்கு பத்திரமொன்றை சமர்ப்பித்திருந்தார். மேற்படி 23 ஆயிரம் பட்டதாரிகள் பாடசாலைகளில் ஆசிரிய பயிற்சிக்காக நியமிக்கப்பட்டு, மூன்று வருட பயிற்சியின் பின்னர் ஆசிரியர்களாக நியமிக்கப்படும் வகையில் அந்த பத்திரம் அமைந்திருந்தது.

எனினும், ஆசிரிய சேவை யாப்பில் பட்டதாரிகள் நியமனம் வழங்கப்படும் போது மாகாண மட்டத்தில் அல்லது தேசிய மட்டத்தில் அவர்களுக்கு பரீட்சை நடத்தப்பட்டு பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மற்றும் பொருத்தமான பாடங்களுக்கு ஆசிரியர்களாக இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் அமைச்சரவைப் பத்திரம் வேறு விதமாக இருந்தது.

நியமனங்களை வழங்கிவிட்டு அதன் பின்னர் பரீட்சை நடத்துவது என்பது என்ன முறைமை என்பதை நான் அறியேன். ஏனைய சந்தர்ப்பங்களில் பரீட்சைகள் நடத்தப்பட்டே நியமனங்கள் வழங்கப்படுகின்றன.அதன் பின்னர் நான் ஆசிரியர் சேவை யாப்பின்படி நியமனங்களை வழங்குவதற்கு அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பித்தேன். அதற்கிணங்க விண்ணப்பங்களைக் கோரினோம்.

முன்பதாக அரசாங்கம் 52,000 அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு நியமனம் வழங்கியிருந்தது. நாம் மீண்டும் அவர்களிடம் விண்ணப்பங்களை கோரினோம். 2023 மார்ச்சில் இப்பரீட்சை நடைபெறவிருந்தது. இதே மாதம் 23 இல், முப்பது பேர் நீதிமன்றத்திற்குச் சென்றனர். நான்கு எதிர் மனுக்களை அவர்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். தாக்கல் செய்யப்பட்டது என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: