பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனங்கள் – கல்வி அமைச்சு தகவல்?

Monday, August 10th, 2020

எதிர்வரும் மாதங்களில் 15,000 பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனங்கள் வழங்கப்படும் என்றும், அவர்கள் தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நியமிக்கப்படுவர் எனவும் கல்வி அமைச்சை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா மற்றும் பொதுத்தேர்தல் காரணமாக தள்ளிவைக்கப்பட்ட இந்த நியமனத்தில் தற்பொழுது முதற்கட்டமாக க.பொ.த சாதாரண தரத்திற்கான கணிதம், விஞ்ஞானம் மற்றும் க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான ஆசிரிய நியமனங்களும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் வெற்றிடங்கள் தொடர்பான விபரங்கள் பாடசாலை அதிபர்கள் மூலம் பெற்றுக் கொண்டதன் அடிப்படையில் சுமார் 5000 ஆசிரியர்களுக்கு மாகாணப் பாடசாலைகளில் நியமனம் வழங்கப்படும். மேலும் ஆசிரியர்கள் அதிகமுள்ள பாடசாலைகளிலிருந்து வெற்றிடமுள்ள பாடசாலகளுக்கு அவர்களை அனுப்பும் திட்டமும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

மற்றும் ஆயிரம் ஆசிரியர் உதவியாளர்களை நியமிக்கும் திட்டமும் அரசிடம் உள்ளதாகவும், இதற்கு ஆசிரியர் மற்றும் கல்வி டிப்ளோமாவை கட்டாயம் முடித்திருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts:


குற்றப்புலனாய்வுத் தகவல் மீளாய்வு மத்திய பணியகம் எனும் பெயரில் புதிய பிரிவு அமைக்க முடிவு!
நாட்டில் சீனி – பால்மாவுடன் எரிவாயுவிற்கான தட்டுப்பாடும் இல்லை – அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவிப்பு...
காங்கேசன்துறை பகுதிகளில் இரும்பு திருட்டுக்களில் ஈடுபட்டு வரும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை – ஈழ மக...