பட்டதாரிகளுக்கு அரசு அநீதி இழைத்துவிட்டது – தேசிய பட்டதாரிகள் மையம் தெரிவிப்பு!

53 ஆயிரம் பட்டதாரிகள் அரச வேலைக்காகப் பதிவு செய்திருந்த நிலையில் 20 ஆயிரம் பேரை மாத்திரம் தெரிவு செய்து நியமனம் வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. எஞ்சிய 33 ஆயிரம் பட்டதாரிகளும் அரசு அநீதி இழைத்துள்ளது. இவ்வாறு தேசிய பட்டதாரிகள் மையத்தின் தொடர்பாளர் சந்தன சூரியாராச்சி தெரிவித்தார்.
இதுபற்றி அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி பட்டம் பெற்ற 33 ஆயிரம் பட்டதாரிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. 35 வயதுக்கு உட்பட்ட பட்டதாரி பயிலுநர்களையே அரசில் இணைத்துக் கொள்ளலாம் என்ற நிலைப்பாட்டில் இருந்தால் அடுத்த தொகுதி பட்டதாரிகளைத் தெரிவு செய்யும் சந்தர்ப்பத்தில் 2012 ஆம் ஆண்டு பட்டம் பெற்ற பட்டதாரிகள் இந்த வயதெல்லையைக் கடந்து அரச வேலையையும் இழந்து விடுவார்கள்.
நீண்ட இடைவெளியில் இந்த ஆள்சேர்ப்பு நடப்பதால்தான் ஒரு தொகுதி பட்டதாரிகள் தொழில் வாய்ப்பை இழக்கும் சூழ்நிலை உருவாகும். இந்த வயது எல்லையை 45 ஆக உயர்த்தும்படி பலமுறை வேண்டுகோள் விடுத்தபோதிலும் எவரும் அதற்குச் செவிமடுக்கவில்லை.
பட்டதாரிகளைத் தெரிவு செய்வதில் அரசியல் தலையீடுகள் நேர்முகப் பரீட்சையின் போது உள்ளிடுவதால் தங்களின் தேசிய பட்டதாரிகள் மையம், நாடளாவிய ரீதியில் எல்லா வேலையற்ற பட்டதாரிகளையும் இணைத்துக்கொண்டு ஒரு போராட்டத்தை மேற்கொண்டு தகுதிபெற்ற சகல பட்டதாரிகளையும் (அரசியல்வாதிகளின் தலையீடின்றி) நியமிக்கும்படி அரசிடம் கோரிக்கை முன்வைக்கவுள்ளது என்றார்.
Related posts:
|
|