பட்டதாரிகளுக்கான பயிற்சி வேலைத்திட்டம் தற்காலிகமாக நிறுத்தம் – மாதாந்த கொடுப்பனவை வழங்குவதற்கு நடவடிக்கை என அரச சேவை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவிப்பு!
Thursday, October 22nd, 2020அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ள பட்டதாரிகளுக்கான பயிற்சி வேலைத்திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அரச சேவை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கறித்த நடவடிக்கை கொரோனா தொற்றை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்பதாக இதுவரை அரச சேவைகளுக்கான பயிற்சிகளில் 50 ஆயிரம் பட்டதாரிகள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இவர்களை பிரதேச செயலகங்களுக்கு அழைக்கும் போது, சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு அரச சேவை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, இவர்களுக்கான மாதாந்த கொடுப்பனவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியத் தலைவர் நீதிமன்றில் !
நுகர்வோர், கடந்த ஜூன் 30 ஆம் திகதி வரை 14.6 பில்லியன் கொடுப்பனவுகளை செலுத்த தவறியுள்ளனர் - மின்சார ச...
மூன்று தேர்தல் திருத்தச் சட்டமூலங்களும் எதிர்வரும் நாடாளுமன்ற வாரத்தில் விவாதிக்கப்படும்!
|
|