பட்டதாரிகளுக்கான பயிற்சி வேலைத்திட்டம் மே 11 ஆம் திகதி ஆரம்பம் !

Tuesday, March 10th, 2020

அரச சேவைகளுக்காக புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள பட்டதாரிகளுக்கான பயிற்சி வேலைத்திட்டம் மே மாதம் 11 ஆம் திகதி ஆரம்பமாவதாக அரச நிர்வாக உள்நாட்டு அலுவல்கள், மாகாண மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பட்டதாரிகள் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அறிவித்திருந்தார். அதன்படியே பட்டதாரிகள் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகளின் பெயர் விபரம் நாளை மறுதினம் இணையதளத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Related posts: