பட்டதாரிகளின் மாதாந்தக் கொடுப்பனவு அதிகரிப்பு !

Sunday, November 28th, 2021

தற்போதைய அரசாங்கத்தினால், அண்மையில் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட பட்டதாரிகளின் நியமனங்களை நிரந்தரமாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவதாக தெரிவித்துள்ளது.

இந்த பட்டதாரிகளின் சம்பளத்தை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இதன்படி அவர்களின் மாதாந்தக் கொடுப்பனவு ரூ. 41 ஆயிரமாக வழங்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அவர்கள் மாதாந்தம் 20 ரூபா பெறுகின்றனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளதுடன் அவர்கள் எதிரகொள்ளும் பொருளாதார சுமையை கருத்திற் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts: