பட்டதாரிகளின் பயிற்சி காலத்தை மேலும் நீடிக்க தீர்மானம் இல்லை – நடவடிக்கை எடுக்க உரிய தரப்பினருக்கு ஜனாதிபதி அறிவுறுத்யுள்ளதாக அமைச்சர் டளஸ் அழகப்பெரும அறிவிப்பு!

Tuesday, September 14th, 2021

பட்டதாரிகளின் பயிற்சி காலத்தை மேலும் 6 மாதத்தால் நீடிப்பதற்கான எந்தவொரு தீர்மானத்தையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பயிற்சி காலத்தை மேலும் 6 மாதத்திற்கு நீடிப்பதற்கான பத்திரம் அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்டிருந்தது.

53 ஆயிரம் பயிற்சி பட்டதாரிகளில் 18 ஆயிரம் பேருக்கு நியமனம் வழங்குவதற்கு எதிர்பார்த்திருந்த போதிலும் அந்த பணிகள் இன்னும் நிறைவடையவில்லை.

இதன்காரணமாக அந்த பணிகளை விரைவுப்படுத்தி, எஞ்சியவர்களையும் அரச சேவையில் உள்வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உரிய தரப்பினரை அறிவுறுத்துமாறு ஜனாதிபதி விடயதான அமைச்சர்களை பணித்ததாகவும் அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

000

Related posts:


தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பில் கைது செய்யும் அதிகாரம் பொலிஸாருக்கு மாத்திரமே உள்ளது - தேர்தல் ஆணை...
12.5 கிலோகிராம் எடை கொண்ட சமையல் எரிவாயுவை 1,493 ரூபாவுக்கு சந்தையில் விற்பனை செய்ய வேண்டும் - அமை...
உண்மைத்தன்மை இருக்குமாயின் அதனை நாம் வரவேற்போம் – ஈ.பி.டி.பியின் உடக பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன் தெரிவ...