படை வீரர்கள் மாதத்தை பிரகடனப்படுத்தி தேசிய படை வீரர்கள் நினைவுக் கொடி ஜனாதிபதிக்கு அணிவிப்பு!
Tuesday, May 4th, 2021படை வீரர்கள் நினைவு மாதத்தை பிரகடனப்படுத்தி தேசிய படை வீரர்கள் கொடி ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவுக்கு அணிவிக்கப்பட்டது.
ரணவிரு சேவா அதிகார சபையின் பதில் தலைவர் திருமதி சோனியா கோட்டேகொடவினால் படை வீரர்கள் கொடி ஜனாதிபதிக்கு இன்று (04) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து அணிவிக்கப்பட்டது.
மூன்று தசாப்த காலமாக நிலவிய பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்து சுதந்திரமானதொரு தேசத்திற்காக அர்ப்பணிப்புகளை செய்த படை வீரர்களை நினைவுகூரும் வகையில் படை வீரர்கள் மாதம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
மே மாதம் முதலாம் வாரத்தில் ஜனாதிபதி அவர்களுக்கு தேசிய படை வீரர்கள் கொடி அணிவிக்கப்பட்ட நாள் முதல் படை வீரர்கள் நினைவு மாதம் ஆரம்பமாகிறது.
பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
உண்மைக்கு புறம்பான செய்திகளை சில இணைத்தளங்கள் வெளியிட்டு வருகின்றன - சுகாதார அமைச்சு!
காற்றாடிகள் அமைக்கப்பட்ட பின்னர் பளைப் பகுதியில் மழைவீழ்ச்சி குறைந்துள்ளது - தென்னைப் பயிர்ச் செய்கை...
இயல்பு நிலைக்கு திரும்பும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் !
|
|