படைப்புழு தாக்கத்திற்கான நட்டஈடு எதிர்வரும் 10 ஆம் திகதி!

Saturday, February 23rd, 2019

சேனா படைப்புழுக்களின் தாக்கத்தினால் பாதிப்புக்குள்ளான சோள பயிர் செய்கையாளர்களுக்கான நட்டஈடு எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் வழங்கப்படவுள்ளது.

விவசாயத்துறை அமைச்சர் பீ.ஹெரிசன் இதனை தெரிவித்துள்ளார்.

படைப்புழுக்களின் தாக்கம் காரணமாக அம்பாறை மாவட்டம் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, மொனராகலை உள்ளிட்ட பல மாவட்டங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

இந்தநிலையில் பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கான நட்டஈடு வழங்கும் செயற்பாடு எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் இடம்பெறவுள்ளது.

படைப்புழு தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட ஏக்கர் ஒன்றுக்கு 40 ஆயிரம் ரூபா வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் பீ.ஹெரிசன் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: