படைப்புழுவால் பயிர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பில் மதிப்பீடு!

Thursday, January 17th, 2019

படைப்புழுவின் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பிலான மதிப்பீட்டை நாளை(18) முதல் முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் எம்.டபிள்யூ. வீரக்கோன் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் மதிப்பீட்டுப் பணிகளுக்காக குழு நியமிக்கப்படும் எனவும் விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்  மேலும் குறிப்பிட்டுள்ளார்.

படைப்புழுவின் தாக்கம் சோளப் பயிர்ச்செய்கையையே அதிகளவில் பாதித்துள்ளதுடன், கீரி சம்பாவையும் அதிகம் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து ஏனைய பயிர்ச்செய்கைகளையும் இது பாதிக்கலாம் என்பது தொடர்பில் விவசாயிகள் அவதானமாக இருக்க வேண்டும். விசேடமாக நெற்செய்கையைப் பாதிக்கும். இந்த அழிவு தொடர்பிலும் அதிலிருந்து பாதுகாப்பு பெறுவது எவ்வாறு என்பது தொடர்பிலும் இரண்டு கிழமைக்குள் விவசாயிகளை அறிவுறுத்துவதற்கு நாங்கள் எதிர்பார்த்துள்ளோம். இந்த அழிவு தொடர்பில் முழுமையான மதிப்பீடுகளை மேற்கொள்வதற்கும் எதிர்பார்த்துள்ளோம் என விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் எம்.டபிள்யூ. வீரக்கோன் தெரிவித்துள்ளார்.

Related posts: