படைப்புழுக்கள் ஒழிக்கப்பட்டுள்ளது சோள உற்பத்தியை விவசாயிகள் மீண்டும் ஆரம்பிக்கலாம் – விவசாய திணைக்களம்!

Sunday, February 10th, 2019

விவசாயிகளுக்கு பாரிய அச்சுறுத்தலாக விளங்கிவந்த சேனா படைப்புழுக்கள் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளதாக விவசாயத்துறைப் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதனால் எதிர்வரும் சிறுபோக பருவகாலத்தில் மீண்டும் சோள உற்பத்தியை ஆரம்பிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சேனா படைப்புழுக்கள் தற்போது முற்றாக கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் காலத்தில் 15 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் சோள உற்பத்தியை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனவே சேனா படைப்புழுக்கள் தொடர்பாக இனி விவசாயிகள் அச்சம் கொள்ளத்தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக நாடளாவிய ரீதியில் தீவிரமடைந்துவந்த சேனா படைப்புழுக்களின் தாக்கத்தினால் பல்லாயிரக் கணக்கான விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

Related posts: