படுக்கைக்குச் சென்றவர் சடலமாக மீட்பு : யாழ் நகரில் சம்பவம்!
Thursday, November 22nd, 2018
வாந்தி எடுத்துவிட்டு படுக்கைக்கு சென்ற குடும்பஸ்தர் ஒருவர் நேற்று அதிகாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பழைய பூங்கா வீதியைச் சேர்ந்த நிமலதாஸ் யோசேப் ஜெபர்சன் (வயது 35) என்பவரே மேற்படி உயிரிழந்தவராவார்.
குறித்த நபர் தனது குடும்பத்தைப் பிரிந்து தாயுடன் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மதியம் உணவு உட்கொண்டுள்ளார். பின்னர் மாலை வாந்தி எடுத்துள்ளார். உடல் நிலை சற்று அசதியாக இருப்பதாக கூறி பனடோல் உண்டுவிட்டு படுக்கைக்குச் சென்றுள்ளார்.
பின்னர் நேற்று அதிகாலை குறித்த நபரின் தாயார் அவரை எழுப்பிய போது அவர் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார். உடனடியாகப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டு சடலம் மீட்கப்பட்டதுடன் பிரேத சோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மரண விசாரணையை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
Related posts:
|
|