படித்த மகளிர் திட்டக் காணிகளை மீண்டும் மக்களிடம் வழங்க நடவடிக்கை – ஈ.பி.டி.பியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் தவநாதனின் கோரிக்கைக்கு விவசாய அமைச்சர் தீர்வு!

Thursday, March 18th, 2021

கிளிநொச்சி படித்த மகளிர் திட்டக் காணிகளை மக்களிடம் மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கமத்தொழில் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே உறுதியளித்துள்ளார்.

நேற்றையதினம் கடற்றொழில் அமைச்சரும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வாழ்வாதார அபிவிருத்திக் குழு கூட்டத்தின்போது குறித்த மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் இணைப்பாளர், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் வை.தவநாதன் முன்வைத்த கோரிக்கைக்கு பதிலளிக்கையிலேயே கமத்தொழில் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே இவ்வாறு உறுதிளித்துள்ளார்.

இதனிடையே புரவி புயலால் பாதிப்படைந்த இரணைதீவு இறங்குதுறையைப் புனரமைக்க மதிப்பீட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, இரணைதீவு மக்களின் உடனடிப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வடக்கு மாகாண ஆளுநர் மாகாணசபை மூலம் நிதி ஒதுக்கியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் எழுப்பிய பிரச்சினைக்கு பதிலளிக்கையிலேயே கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் மேலதிக இணைப்பாளர் கோ.றுஷாங்கன் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: