பஞ்சம் இரட்டிப்பாகும் : மிகுந்த ஆபத்தில் 10 நாடுகள் – எச்சரிக்கை விடுத்த ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு திட்டம் !
Thursday, April 23rd, 2020கொரோனா வைரஸ் தொற்றுநோயின் விளைவாக உலகளாவிய பஞ்சம் இரட்டிப்பாகும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளதுடன் குறித்த வைரஸ் காரணமாக விகிதாசாரத்தின் பரவலான பஞ்சத்தால் உலகம் ஆபத்தில் உள்ளது எனவும் ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு திட்டம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் தற்போது பசியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 135 மில்லியனிலிருந்து 250 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
மோதல், பொருளாதார நெருக்கடி மற்றும் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட ஏமன், காங்கோ ஜனநாயக குடியரசு, ஆப்கானிஸ்தான், வெனிசுலா, எத்தியோப்பியா, தெற்கு சூடான், சூடான், சிரியா, நைஜீரியா மற்றும் ஹைட்டி ஆகிய 10 நாடுகள் அதிக ஆபத்தில் உள்ளது.
தெற்கு சூடானில், கடந்த ஆண்டு 61% மக்கள் உணவு நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஐ.நா. உலக உணவு திட்டம் வெளியிட்ட புதிய அறிக்கை கூறுகிறது.
தொற்றுநோய்க்கு முன்பே, கிழக்கு ஆபிரிக்கா மற்றும் தெற்காசியாவின் சில பகுதிகள் ஏற்கனவே வறட்சி மற்றும் மோசமான வெட்டுக்கிளியால் ஏற்பட்ட கடுமையான உணவு பற்றாக்குறையை எதிர்கொண்டன.
அந்தவகையில் பேரழிவைத் தவிர்க்க அவசர நடவடிக்கை தேவை எனவும் உலக உணவு திட்டத்தின் தலைவர் டேவிட் பீஸ்லி வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|