பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் கண்ணிவெடி அகற்றப்படாத கிராம மக்கள் தம்மைப் பதிவு செய்யவும் பிரதேச செயலர் அறிவிப்பு!

Tuesday, January 16th, 2018

பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் கண்ணிவெடி அகற்றாததால் மீளக் குடியமர முடியாத மக்கள் பிரதேச செயலகத்தில் பதிவுகளை மேற்கொள்ளுமாறு பிரதேச செயலர் பரமோதயன் ஜெயராணி தெரிவித்துள்ளார்.

போர் இடம்பெற்ற காலத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் புதைக்கப்பட்ட கண்ணிவெடி தற்போதும் அகற்றப்படாத காரணத்தால் சில கிராமங்கள் போர் நிறைவடைந்து 9 ஆண்டுகள் ஆகின்ற போதும் இதுவரை மீள்குடியமர்த்தப்படவில்லை.

மாவட்டத்தில் இந்தப் பிரதேசமே மிகவும் ஆபத்தான வெடி பொருள்கள் உள்ள பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

கண்ணிவெடி அகற்றும் பிரிவினர் படிப்படியாக வெடிபொருள்களை அகற்றி மக்கள் மீள்குடியமர்வை அவர்களின் காணிகளை ஒப்படைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது கண்ணிவெடி அகற்றப்படாத கிராமத்தில் உள்ள மக்களைப் பதிவு மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: