பசுமையான நகரமாக யாழ் நகரத்தை மாற்றுவேன்- வடக்கின் ஆளுநர்!

யாழ்ப்பாண நகரத்தை பசுமையான நகரமாக மாற்றுவதே தனது நோக்கமாகும் என வட மாமகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே யாழ் உரும்பிராய் சைவத் தமிழ் வித்தியாலய மைதானத்தில் 24-10-2018 அன்று இடம்பெற்ற மரம் நடுகை நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது குறிப்பிட்டார்
ஆளுநர் அங்கு மேலும் உரையாற்றுகையில் யாழ்ப்பாண நகரத்தை பசுமையான நகரமாக மாற்றுவதே எனது நோக்கம். கடந்த மாதம் 4000 மரக்கன்றுகளை பண்ணை பகுதியிலும், யாழ் நகர பாடசாலை பகுதியிலும் நாட்டியிருந்தேன். அதேபோன்று வட மாகாணம் யாழ்ப்பாணத்திலும் மரக்கன்றுகளை நாட்ட திட்டமிட்டிருக்கின்றேன்.
இதபோன்ற செயற்பாடுகளில் ஆர்வம் கொண்ட நிறுவனங்களையும் சமூகப் பிரதிநிதிகளையும் இணைத்து அவர்களுடன் இணைந்து செயலாற்ற எண்ணியுள்ளேன்.
Related posts:
பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் பெப்ரவரியுடன் நிறைவு!
20 ஆவது சீர்திருத்தத்தில் தொகுதிகளுக்கு பொறுப்புக்கூறும் வகையில் கலப்பு தேர்தல் முறை உருவாக்கப்படும்...
யாழ்.மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் தீர்மானத்தை ஏற்கமறுக்கும் யாழ் மத்திய பேருந்து நிலையம்!
|
|