பசிலின் நாடாளுமன்ற பிரவேசம் தொடர்பில் அவரே முடிவெடுக்கவேண்டும் – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

Sunday, November 15th, 2020

நாடாளுமன்றத்திற்கு செல்வது குறித்தமுடிவை பசில் ராஜபக்சவே முடிவு எடுப்பார் என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பசில் ராஜபக்ச தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றம் செல்லவேண்டும் என ஒருமித்த குரலில் வேண்டுகோள் விடுத்துள்ள போதிலும் அவர் தான் நாடாளுமன்ற அரசியலில் ஈடுபடுவது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை என பிரதமர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர் நாடாளுமன்றம் திரும்பி நாட்டிற்கு சேவையாற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள போதிலும் இது முற்றுமுழுதாக அவரே தீர்மானிக்கவேண்டிய விடயம் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இந்த விடயத்தில் ஆர்வம் காட்டியுள்ள போதிலும் பசில் ராஜபக்ச இன்னமும் இந்த விடயத்தில் தனது விருப்பத்தை வெளிப்படுத்தவில்லை என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் இன்னமும் அவரின் தீர்மானத்திற்காக காத்திருக்கின்றோம்,அவருக்கு இது குறித்து தீர்மானி;ப்பதற்கு மேலும் காலம் தேவைப்படுகின்றது போல தோன்றுகின்றது என பிரதமர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: