பசறைகோர விபத்து – டிப்பர் சாரதி கைது!

Sunday, March 21st, 2021

பசறை பேருந்து விபத்தின் பின்னர் தப்பிச்சென்ற டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, விபத்தில் உயிரிழந்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்

பசறை பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் இறுதிக் கிரியைகளுக்காக தலா 30,000 ரூபாவை நிவாரணமாக வழங்குவதற்கு ஊவா மாகாண சபை தீர்மானித்துள்ளது.

உயிரிழந்தவர்களின் இறுதிக் கிரியைகள் மாகாண சபையின் உதவியுடன் மேற்கொள்ளப்படவுள்ளதாக பதுளை மாவட்ட செயலாளர் தமயந்தி பத்திரண தெரிவித்துள்ளார்.

விபத்தில் காயமடைந்த 30 பேர் பதுளை பொது வைத்தியசாலையின் சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களில் ஐவரின் நிலை கவலைக்கிடமாவுள்ளது. விபத்தில் காயமடைந்த மேலும் இருவர் பசறை வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பதுளை – பசறை 13 ஆம் கட்டைப் பகுதியில் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபட்ட தனியார் பஸ் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்

Related posts: