பங்காளதேஷ் உயர் ஸ்தானிகர்- பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சந்திப்பு!

Thursday, August 10th, 2017

இலங்கைக்கான பங்காளதேஷ் உயர் ஸ்தானிகர் ரியாஸ் ஹமிதுல்லாஹ் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.இந்த சந்திப்பின் போது பங்காளதேஷ் உயர் ஸ்தானிகர் மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஆகியோருக்கிடையே இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக சிநேகபூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதனை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.இந்த நிகழ்வில் பங்காளதேஷ் உயர் ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் கொமொடோ அஸ்லம் பர்வேஷ் கலந்துகொண்டார்.

Related posts: