பங்களாதேஷ் விஜயம் மேற்கொள்கிறார் பிரதமர் மகிந்த ராஜபக்ச!

Friday, March 12th, 2021

பிரதமர் மகிந்த ராஜபக்ச அடுத்தவாரம் பங்களாதேஷூற்கான பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை பங்களாதேஷ் வெளியுறவு அமைச்சர் கலாநிதி அப்துல் மொமன் வெளியிட்டுள்ளார்.

பங்களாதேஷின் 50 ஆவது சுதந்திரதினத்தில் கலந்து கொள்ளவே பிரதமர் அந்த நாட்டுக்கு செல்லவுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் பங்களாதேஷின் 50 ஆவது சுதந்திரதின நிகழ்வில் இந்திய பிரதமர் நரேந்தர மோடி உள்ளிட்ட பல நாட்டுத் தலைவர்ளும் விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: