பங்களாதேஷ் சுதந்திர போரில் உயிர்நீத்த வீரர்களின் தேசிய தியாகிகள் நினைவிடத்தில் பிரதமர் அஞ்சலி மரியாதை!

Friday, March 19th, 2021

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பங்களாதேஷ் விஜயத்தின் ஒரு அங்கமாக பங்களாதேஷ் சுதந்திர போரில் உயிர்நீத்த வீரர்களின் தேசிய தியாகிகள் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.

இதன்போது பங்களாதேஷின் இராஜதந்திர அதிகாரிகளும் கலந்து கொண்டதுடன், அதனை தொடர்ந்து பிரதமர் அவர்கள் அந்நாட்டு விருந்தினர் புத்தகத்தில் சிறப்பு குறிப்பொன்றை வெளியிட்டார்.

கௌரவ பிரதமர் வெளியிட்ட குறிப்பு வருமாறு,

பங்களாதேஷ் சுதந்திர போரின்போது தங்களின் உயிரை தியாகம் செய்த பங்களாதேஷ் மக்கள் செய்த தியாகங்களின் நினைவாக மரியாதை செலுத்துவதை ஒரு பாக்கியமாக நான் கருதுகிறேன்.

பங்களாதேஷின் சுதந்திரத்தை போற்றும் அனைவரதும் எதிர்காலத்திற்காக தங்கள் உயிரை தியாகம் செய்த அனைத்து பங்களாதேஷ் மக்கள், சுதந்திரமான, பெருமை வாய்ந்த பங்களாதேஷை உருவாக்கும் பங்கபந்து ஷெயிக் முஜிபுர் ரஹ்மானின் (கனவிற்கு சிறந்த சாட்சியாகும்.

அதனை தொடர்ந்து, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் விஜயத்தை குறிக்கும் வகையில், பங்களாதேஷ் சுதந்திர போரில் உயிர்நீத்த வீரர்களின் தேசிய தியாகிகள் நினைவிடத்தில் பிரதமரினால் மரக்கொன்று நாட்டப்பட்டது.

Related posts: