பங்களாதேஷ் – இலங்கை பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இடையில் சந்திப்பு!

பங்களாதேஷ் தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் பிரதிநிதிகள் மற்றும் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது.
நேற்று பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் இரு நாடுகளினதும் பாதுகாப்பு அமைச்சிகளினதும் ஒருசில அதிகாரிகள் பங்கேற்றதாக பதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேஜேர் ஜெனரல் ஹமிதுர் ரஹ்மான் சௌத்திரி தலைமையில் வருகைதந்துள்ள 24 உறுப்பினர்களைக் கொண்ட பிரநிதிகள் குழு பாதுகாப்புச் செயலாளருடனான சந்திப்பில் பங்கேற்றுள்ளது.
இலங்கைக்கான கல்விச் சுற்றுலாவினை மேற்கொண்டிருக்கும் இப்பிரநிதிகள் குழுவில் பங்களாதேஷின் இராணுவம், கடற்படை, கூட்டுப்பணிகளின் உறுப்பினர்கள் மற்றும் பங்களாதேஷின் சிவில் சேவை உறுப்பினர்கள் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர். இந்த சந்திப்பின்போது இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக பாதுகாப்புச் செயலாளர் மற்றும் அதிதிகளுக்கிடையில் இடம்பெற்றதுடன் இந்நிகழ்வை நினைவுகூறும் வகையில், நீனைவுச்சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த சந்திப்பில் பாதகாப்பு அமைச்சின் மேலதிகச் செயலாளர் ஹெட்டியாராச்சி, ஓய்வு பெற்ற தேசிய புலனாய்வு பிரதானி பிரத பொலிஸ் மாஅதிபர், ஏ.என்.எஸ் மென்டிஸ், இராணுவ இணைப்பதிகாரி மேஜர் ஜெனரல் எஸ்.ஜீ.டீ லியனகே மற்றும் இராணுவ அதிகாரிகள் பலரும் பங்கேற்றுள்ளனர்.
Related posts:
|
|