பகிடிவதை – 15 மருத்துவ பீட மாணவர்களுக்கு வகுப்புத் தடை!

Monday, March 18th, 2019

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் கற்கும் 15 மாணவர்களுக்கு, இந்த வாரம் தொடக்கம் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக, குறித்த பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் அனைவரும் மருத்துவ பீடத்தின் கனிஷ்ட மாணவர்களை மிக மோசமாக பகிடிவதைக்கு உட்படுத்தியது விசாரணைகளின் போது உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, இந்த வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts: