பகிடிவதை விவகாரம்: பல்கலைக்கழகத்தின் பெயரைப் பயன்படுத்தி வேறு யாராவது செய்திருக்கலாம் – யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவிப்பு!

Friday, September 18th, 2020

யாழ் பல்கைக்கழக வளாகத்துள் உடல் ரீதியான எந்த பகிடிவதையும் இடம்பெறவில்லை என யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் சிறீசற்குணராசா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக புதுமுக மாணவர்களிடம் தகாத படங்களை கேட்டு, இணையவழியாக நடக்கும் பகிடிவதை விவகாரம் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளன. இது குறித்து ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அத்துடன் இணையம் ஊடாக இடம்பெற்றதாக கூறப்படும் பகிடிவதைகளை எமது பல்கலையின் பெயரைப் பயன்படுத்தி யாரும் செய்திருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் எமக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் நடைபெற்று வருகிறது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் “பகிடிவதைகள் தொடர்பில் மானியங்கள் ஆணைக்குழுவிற்கு இணையம் மூலம் முறையிட முடியும். அவ்வாறு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை அவர்கள் எமக்கு அனுப்பி வைப்பார்கள். அவற்றில் உடல்ரீதியானவை தொடர்பில் உடன் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இணையரீதியானது எனின் இணையக் குற்ற பொலிஸாராலேயே நடவடிக்கை எடுக்க முடியும். எமது பல்கலைக்கழகத்தின் பெயரைப் பயன்படுத்தி வேறு யாராவது கூட இதனை மேற்கொண்டிருக்கலாம்.

எனினும், எமக்கு மானியங்கள் ஆணைக்குழுவால் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றிருக்கிறது. அதனை நாம் இணையக் குற்ற பொலிஸாரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைத்திருக்கிறோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: