பகிடிவதை தொடர்பில் முறையிட மாணவர்களுக்கு வாய்ப்பு!

Friday, February 24th, 2017

பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதை தொடர்பான முறைப்பாடுகளை இணையத்தின் ஊடாக முன்வைப்பது குறித்து விஷேட வேலைத்திட்டத்தை செயற்படுத்த பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

24 மணித்தியாலங்களும் செயற்படக்கூடிய தொலைபேசி இலக்கம் ஒன்றை இதன்பொருட்டு அறிமுகப்படுத்தியுள்ளதாக, ஆணைக்குழுவின் தலைவர் மொஹான் டி சில்வா குறிப்பிட்டுள்ளார். இதன் படிபகிடிவதை மட்டுமல்லாது பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் முகம்கொடுக்கும் அனைத்து சித்திரவதைகள் தொடர்பிலும் முறையிட மாணவர்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கவுள்ளது.

இதற்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் பிரிதொரு பிரிவையும் நிறுவியுள்ளனர்.  011 212 3456 என்ற இலக்கத்திற்கு அல்லது www.ugc.ac.lk என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசித்து எந்த நேரத்திலும் தமது பிரச்சினைகள் குறித்து கூறமுடியும் என மொஹான் டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

University-Grants-Commission-Sri-Lanka-logo_0_0

Related posts: