பகிடிவதையின் கொடூரம் – யாழில் கழுத்தறுத்து தற்கொலைக்கு முயன்ற மாணவன்!
Saturday, December 29th, 2018யாழ்.பல்கலைக்கழக மாணவன் ஒருவன் பகிடிவதை காரணமாக கழுத்தறுத்து தற்கொலைக்கு முயற்சித்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி வளாகத்தில் கற்கும் மாணவனே தற்கொலைக்கு முயன்றுள்ளார். இவர் பளை பகுதியை சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது.
குறித்த மாணவன் நேற்று மாலை வீட்டிலிருந்தவர்களிடம் பல்கலைகழகத்தில் தான் மோசமான பகிடிவதைக்கு உள்ளாகி வருவதாக தெரிவித்துள்ளார்.
பின்னர் தனது அறைக்குள் சென்று கழுத்தை அறுத்துள்ளார். அதனை அவதானித்த வீட்டிலிருந்தோர் மாணவனை உடனடியாக மீட்டு பளை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
பளை வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் மாணவன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Related posts:
தேர்தல் சட்ட மீறல்: 167 பேர் கைது - பொலிஸ் தலைமையகம்!
யாழில் 1500 இற்கும் மேற்பட்டோர் டெங்கு நோயால் பாதிப்பு - சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்பு பிரிவு!
மக்களின் கருத்துக்களுக்கு இடமளிக்கப்பட வேண்டும் - அமைச்சர் சஜித் பிரேமதாச!
|
|