நோர்வே வெளிவிவகார அமைச்சின் செயலாளர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்!

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நோர்வே வெளிவிவகார அமைச்சின் செயலாளர் மேரி ஏன் ஹாகன் இன்று(06) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விஜயத்தின்போது கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகள் தொடர்பில் அவர் கவனம் செலுத்தவுள்ளதாக, இலங்கைக்கான நோர்வே உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளுக்காக சுமார் 7 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி வழங்குவதற்கு நோர்வே அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
ஜ.நா அதிகாரி இலங்கை வருகை!
நாட்டின் பாதுகாப்பு முறைமை முற்றாக மாற்றியமைக்கப்படும் கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவிப்பு!
நாட்டில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புக்கள் !
|
|