நோர்வே வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கை விஜயம்!

Friday, March 1st, 2019

நோர்வே நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் மெரிஏன் ஹேகன் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வரவுள்ளார்.

இம்மாதம் 5ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில் அவர் இலங்கையில் தங்கி பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன மற்றும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார்.

அதேபோல் , காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலக பிரதிநிதிகள் மற்றும் மனித உரிமை ஆணைக்குழு அதிகாரிகள் குழுவொன்றையும் நோர்வே வெளியுறவுத்துறை அமைச்சர் சந்திக்க எதிர்பார்த்துள்ளதாக அந்நாட்டு தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts: