நோர்வே நாட்டு பெண்ணை ஏமாற்றி 32 இலட்சம் பெற்ற முல்லைத்தீவு இளைஞன் கைது!

Saturday, June 16th, 2018

நோர்வே நாட்டு பெண் ஒருவரை முகநூல் மூலம் ஏமாற்றி 35 இலட்சம் மூபா பெற்றுக்கொண்ட முல்லைத்தீவு இளைஞர் ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த நபரை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த நபர் நோர்வே நாட்டு பெண்ணிடம் முகநூல் மூலம் தொடர்பை ஏற்படுத்தி நட்பாக பழகி அவரிடமிருந்து 32 இலட்சம் ரூபா பணம் பெற்றுக்கொண்டுள்ளார்.இந்த நிலையில் குறித்த நபர் நோர்வே நாட்டு பெண்ணுடனான தொடர்பை திடீரென நிறுத்தியுள்ளார்.

இந்த நிலையில் தாம் ஏமாற்றப்பட்டுள்ளதை உணர்ந்து கொண்ட பெண் அவரை தேடி இலங்கைக்கு வந்துள்ளார்.பின்னர் முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் நிலையத்தில் குறித்த பெண் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த பெண்ணிடம் பணம் அனுப்பியதற்கு ஆதாரம் இருந்த நிலையில் விசேட விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் சந்தேகநபரை கண்டுபிடித்து நேற்று முன்தினம் கைது செய்திருந்தார்கள்.

இதன்போது தாம் பணம் பெற்றதை ஒப்புக்கொண்ட நிலையில் இவரை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் முன்லைப்படுத்தினார்கள். இதையடுத்து குறித்த நபருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: