நோர்தேன் சென்ரர் வைத்தியசாலை  சத்திரசிகிச்சையில் குழறுபடி – பாதிக்கப்பட்ட நோயாளர் குற்றச்சாட்டு!

Tuesday, October 24th, 2017

நோர்தேன் சென்ரர் வைத்தியசாலையில் கண் புரை சத்திரசிகிச்சை மேற்கொண்ட 10 நோயாளர்களுக்கு கிருமி தொற்று ஏற்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நோயாளர்களுக்கான கண் புரை சத்திரசிகிச்சையினை அசண்டையீனமாக தவறான முறையில் சத்திரசிகிச்சை மேற்கொண்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

யாழ்ப்பாணம் உட்பட மன்னர், வவுனியா பகுதியைச் சேர்ந்த 10 நோயாளர்கள் கண் புரை சத்திரசிகிச்சைக்காக கடந்த சனிக்கிழமை யாழ்;. திருநெல்வேலியில் உள்ள நோர்தேன் சென்ரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மாலை 6 முணி முதல் 7 மணிவரை  10 நோயாளர்களுக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சத்திரசிகிச்சையினை கண் வைத்திய நிபுணர் மலரவன் சத்திரசிகிச்சை மேற்கொண்டுள்ளார். இரவு 8.00 மணியளவில் சத்திரசிகிச்சை நிறைவடைந்ததுள்ளது.

இரவு 8 மணியின் பின்னர் நோயாளர்களை வீடு செல்லுமாறு வைத்தியசாலையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அடுத்தநாள்  ஞாயிற்றுக்கிழமை காலை கண் பரிசோதனைக்காக வருமாறு வைத்தியசாலையில் இருந்து நோயாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நோயாளர்களின் நிலமை எவ்வாறு காணப்படுகின்றதென்றும் தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டு கேட்டுள்ளனர்.

சத்திரசிகிச்சை மேற்கொண்ட நோயாளர்களுக்கு  நேற்று திங்கட்கிழமை (23.10) காய்ச்சலுடன் கண் திறக்கமுடியாமல் இருந்ததுள்;ளது. நோர்த்தேன் சென்ரல் வைத்தியசாலைக்குச் சென்ற நோயாளர்களை யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

ஆனாலும், கண் புரை சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நோயாளர்களுக்கு ஏன் காய்ச்சலுடன் கண் திறக்க முடியாமல் ஏற்பட்டது என்பது தொடர்பாக வைத்திய நிபுணர்களுக்கே தெரியவில்லை. பாதிக்கப்பட்ட நோயாளர்கள் மற்றும் நோயாளர்களின் உறவினர்கள் வைத்திய சாலை நிர்வாகி கேசவனுடம், கண் சத்திரசிகிச்சை நிபுணரிடமும் விளக்கம் கேட்டுள்ளனர்.

சரியான பதில்கள் தமக்கு தரவில்லை என்றும், காய்ச்சல் மற்றும் கண் திறக்கமுடியாமைக்கான காரணத்தினை இதுவரை கண்டறியவில்லை என்றும் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

ஒரு கண்ணில் கண் புரை சத்திரை சிகிச்சை மேற்கொள்வதற்கு 65 ஆயிரம் ரூபா பணம் செலுத்தப்பட்டதாகவும், ஆனால், சத்திரசிகிச்சையினை சரியான முறையில் மேற்கொள்ளவில்லை என்றும் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

காய்ச்சல் மற்றும் கண் வீக்கத்துடன் திறக்கமுடியாமல் உள்ள ஏனைய மாவட்டத்தினைச் சேர்ந்த நோயாளர்களை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு 4 ஆயிரத்து 500 ருபா பணமும் கொண்டு வருமாறும் நோர்த்தேன் சென்ரல் வைத்தியசாலையில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண் சத்திரசிகிச்சை நிபுணர் மலரவனிடம் கேட்ட போது, கடந்த 5 வருடங்களாக தாம் கண் சத்திரசிகிச்சை மேற்கொண்டு வருகின்றதாகவும், இந்த வருடம் தான் இவ்வாறான பிரச்சினை ஏற்பட்டுள்ளதென்றும், ஏன் இவ்வாறு ஏற்பட்டதென்றும் தெரியவில்லை என்று அசண்டையீனமாக பதிலளித்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் தெரிவிக்கின்றனர்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நோயாளர்கள் தற்போது 15 ஆம் இலக்க விடுதியில் அனுமதிக்ப்பட்டுள்ளனர்.

பரிசோதனை செய்வதாக கூறுகின்றார்கள். என்ன பரிசோதனை என்பது பற்றியும் நோயாளர்களுக்கு இதுவரை தெரியப்படுத்தவும் இல்லை.

பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு சத்திரசிகிச்சையின் போது, தவறு என்ன நடந்ததென தெரியப்படுத்த வேண்டும். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும் 65 ஆயிரம் ரூபா பெற்றுக்கொண்டு சத்திரசிகிச்சை மேற்கொண்ட நோயாளர்களுக்கு இவ்வாறு பாதிப்பு ஏற்பட்டதமைக்கு நிர்வாகம் உரியிநடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்பதுடன், சத்திரிசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நோயாளர்களிற்கு மீண்டும் பார்வை வருவதற்கான நடவடிக்கையினை உடனடியாக வைத்தியர் மலரவன் முன்னெடுக்க வேண்டுமென்றும் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளதுடன், பணத்தினை மட்டும் இலக்காக பார்க்காமல் நோயாளர்களின் நலனில் அக்கறை கொண்டு உhயி சிகிச்சைகளை முன்னெடுக்க வேண்டுமென்றும் நோயாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

எதிர்வரும் காலங்களில் சரி மருத்துவ சேவையில் தவறினை இழைக்காது உரிய முறையில் சத்திரசிகிச்சைகளை முன்னெடுக்குமாறும் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.


போக்குவரத்து சீரின்மை: கல்வியை விட்டு இடைவிலகும் மாணவர்கள்.
ஆசிரியர் தினத்தன்று பாரிய ஆர்பாட்டம் -  ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்கம்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் கொலைவெறித் தாக்குதல்- ஈ.பி.டி.பியின் ஆதரவாளர் படுகாயம் - வைத...
பின்லாந்தின் ஒத்துழைப்புடன் 13 வருட கல்வி வேலைத்திட்டம் முன்னெடுப்பு!
வீதிகளுக்கான பெயர்கள் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மாத்திரம் - பிரதமர் அலுவலகம்!