நோயாளி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு – சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சம்பவம்!

Saturday, April 7th, 2018

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் 5 ஆம் இலக்க ஆண்கள் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கச்சாய் வீதி சாவகச்சேரியைச் சேர்ந்த சிவானந்தன் (வயது-60) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார்.

வெள்ளிக்கிழமை காலை 5 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் 5 ஆம் இலக்க விடுதியின் குளியலறையில் இவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

குறித்த நபர் கடந்த புதன்கிழமை இரவு நெஞ்சுவலி காரணமாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் 5 ஆம் இலக்க நோயாளர் விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையிலேயே நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் விடுதியின் குளியலறை வெளிப்பக்கமாக பூட்டப்பட்டிருப்பதைக் கண்ட ஊழியரொருவர் யன்னல் வழியாகப் பார்த்த போதே மேற்படி நபர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார். உடனடியாக இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய பின்னர் பூட்டினை உடைத்து உள்நுழைந்து பார்த்தபோது கட்டியிருந்த சாரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் காணப்பட்டதாக வைத்தியசாலையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் நூலகம் ஒன்றில் பணியாற்றி அண்மையில் ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: