நோயாளிக்கு சிகிச்சை அளிக்க முன் மரபணு பரிசோதனை -சுகாதார அமைச்சு முன்னெடுக்கத் தீர்மானம்!

Wednesday, April 19th, 2017

நோயாளி ஒருவருக்கு சிகிச்சையளிப்பதற்கு முன் அவருக்கு மரபணு பரிசோதனை ஒன்றை நடத்தி அதற்கேற்ப சரியான மருந்துகளை வழங்குவதற்கான திட்டமொன்றை சுகாதார அமைச்சு முன்னெடுக்கவுள்ளது.

நோயாளி ஒருவருக்கு சிகிச்சையளிக்கும் போது அவரது மரபணு பற்றிய பரிசோதனையை நடத்தி மருந்துகளை வழங்குவது வெற்றியளிப்பதாக அமெரிக்காவில் செய்த ஆராய்ச்சிகள் மூலம் தெரியவந்துள்ளது.

அதே முறையை இலங்கையிலும் பின்பற்றுவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்திருக்கின்றது எனத் தெரியவருகின்றது. விசேடமாக புற்றுநோயாளிகளிடம் மேற்கொள்ளப்படும் மரபணு பரிசோதனைகளின் மூலம் அவர்களின் ஆயுட்காலத்தை 84 வீதம் அதிகரிக்கலாம் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.