நோயாளிகளுக்கு நன்மையான சட்டங்கள்!

தனியார் மருத்துவமனைகளின் சேவைக் கட்டணங்களுக்கான வற்வரி அதிகரிக்கப்படும் அதேவேளை வைத்தியப் பரிசோதனைகளுக்கான (சனலிங்) கட்டணம் 2000 ரூபாவாக வரையறுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
அதனை மீறி அதிகட்டணம் அறவிட்டால் அத்தனியார் வைத்தியசாலை கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படும் என்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோது அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சத்திர சிகிச்சை நிபுணர்கள் நோயாளி ஒருவருக்கு சத்திர சிகிச்சை மேற்கொண்ட பின்னர் நோயாளியின் அருகில் ஒரு மணித்தியாலம் இருக்க வேண்டும் என்ற சட்டம் கொண்டுவரப்படவுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார். இதேபோன்று நோயாளிகளுக்கு நன்மையான விதத்தில் பல சட்டங்கள் கொண்டுவரப்படவுள்ளன என அவர் மேலும் தெரிவித்துள்ளார்
Related posts:
35 வயதுக்கு குறைந்தவர்கள் முச்சக்கர வண்டி செலுத்த தடை!
250 பேருந்துகளுக்கு பற்றாக்குறை!
2021 வாக்காளர் இடாப்பு திருத்தம் தொடர்பில் 30 ஆயிரம் ஆட்சேபனைகள் - தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவி...
|
|