நோயாளர்கள் இல்லையேல் தாதியர்களுக்கான தேவை இருக்காது – அமைச்சர் ராஜித்த சேனாரத்ன!

Tuesday, April 11th, 2017

தாதியர்கள் அனைவருக்கும் வசதிகள் கிடைப்பது, நாட்டில் நோயாளர்கள் இருப்பதாலேயே எனவும், அவர்கள் இல்லையாயின் தாதியர்களுக்கான தேவை இருக்காது எனவும், சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

தற்போது, தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டு வேலை நிறுத்தம் செய்யும் அவர்கள், இறுதியில் தமது போராட்டம் வெற்றியளித்துள்ளதாக தெரிவிப்பதாகவும், ஆனால் நடப்பது நோயாளிகளை சிரமத்திற்குள்ளாக்கியமை மற்றும் அவர்கள் மரணிப்பது மட்டுமே எனவும் ராஜித்த சுட்டிக்காட்டியுள்ளார்.  பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்காது செய்வதற்கு வேறு எதுவும் இல்லாத சந்தர்ப்பத்திலேயே போராட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Related posts: