நோயாளர்களுக்கான படகு சேவை வேண்டும் – இரணைதீவு மக்கள் கோரிக்கை!

Monday, July 8th, 2019

கிளிநொச்சி – இரணைதீவு பகுதி மக்களின் மருத்துவ தேவைகளுக்கு ஏற்ற வகையில் நோயாளர்களுக்கான படகு சேவை ஒன்றினை ஏற்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

பூநகரி பிரதேசத்திற்கு உட்பட்ட இரணைதீவு பகுதியில் மக்கள் மீள்குடியேறியதையடுத்து குறித்த பிரதேச மக்களின் மருத்துவ தேவை நிவர்த்தி செய்யப்படுவதில் காலதாமதங்கள் காணப்படுகின்றன.

எனவே இரணைதீவு மக்கள் இரணைதீவிலிருந்து நோயாளிகளை கொண்டு செல்வதற்கு ஏற்ற வகையில் நோயாளர்களுக்கான படகு சேவையை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

பூர்வீகமாக மக்கள் வாழ்ந்த குறித்த தீவில் வெளியேற்றப்பட்டு 28 வருடங்களின் பின்னர் சொந்த இடத்தில் குடியமர அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் இங்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படாவிட்டாலும் மருத்துவ வசதி என்பது மிக முக்கியமான ஒன்றாக காணப்படுவதனால் இந்த மருத்துவ வசதியை ஏற்படுத்தித்தர வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

Related posts: