பிரான்ஸ் தாக்குதலுக்கு ஜனாதிபதி கண்டனம்!

நேற்றிரவு பிரான்ஸில் நடத்தப்பட்டுள்ள தீவிரவாத தாக்குதலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
குறித்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதேவேளை குறித்த தாக்குதலினால் இலங்கையர் எவரும் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பது தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.இது குறித்து பிரான்ஸிலுள்ள இலங்கை தூதுவராலயம் தகவல்களை சேகரித்து வருவதாக பிரான்ஸின் வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் மஹேசினி கொலொன்ன தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த தாக்குதலுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கைத் தீவின் 73 ஆவது சுதந்திர தினம் இன்று !
தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள சீரம், ஸ்பூட்னிக், பைசர், சினோபோர்ம் உள்ளிட்ட நிறுவனங்களுடன் பேச்சு - அர...
நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் சட்டத்தை தக்கவைக்க வேண்டும் - தலைக்கு மேல் தொங்கும் வாளுக்கு இலங...
|
|