நேற்று அடையாளம் காணப்பட்ட 31 கொரோனா நோயாளிகளில் 21 பேர் கடற்படையினர் – சுகாதார பணிப்பாளர் அனில் ஜாசிங்க!

Wednesday, April 29th, 2020

இலங்கையில் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 31 கொரோனா நோயாளிகளில் 21 பேர் கடற்படை சிப்பாய்கள் என சுகாதார பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அவர்களில் 13 பேர் வெலிசர கடற்படை முகாமிலும் 8 பேர் விடுமுறைக்கு வீடு சென்றிருந்தவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அவர்களுடன் நெருக்கமாக செயற்பட்ட 6 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளதாக நேற்றைய தினம் உறுதியாகியதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, இராணுவத்தினர் நால்வருக்கும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அனில் ஜாசிங்க குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய கொரோனா தொற்றுக்குள்ளான வெலிசர கடற்படை முகாமின் கடற்படை சிப்பாய்கள் மற்றும் அவர்களுடன் நெருக்கமாக செயற்பட்டவர்கள் 230 ஆக அதிகரித்துள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Related posts: