நேர மாற்றத்துடன் எதிர்வரும் 18 ஆம் திகதிமுதல் பாடசாலைகள் ஆரம்பம் – பாட திட்டத்தை முழுமையாக உள்ளடக்க முடியாத நிலை ஏற்படுமாயின் சனிக்கிழமைகளிலும் நடத்து ஏற்பாடு – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Wednesday, April 6th, 2022

இலங்கையிலுள்ள பாடசாலைகளில் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் புதிய நடைமுறை செயற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் புதிய தவணையிலிருந்து பாடசாலை நேரத்தை ஒரு மணித்தியாலம் வரை நீடிப்பதற்கான தீர்மானத்தை கல்வி அமைச்சு எடுத்துள்ளது.

இந்த ஆண்டுடன் (2022) தொடர்புடைய பாடத்திட்டங்களை உள்ளடக்குவதற்கு 139 நாட்கள் வரையறுக்கப்பட்ட கால அவகாசம் காணப்படுவதால், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாடசாலை நேரத்தை ஒரு மணித்தியாலம் நீடித்து கற்பித்தலுக்கான காலம் அதிகரிக்கப்படவுள்ளது.

இந்த புதிய திட்டத்தாலும் பாட திட்டத்தை முழுமையாக உள்ளடக்க முடியாத நிலை ஏற்படுமாயின் சனிக்கிழமைகளில் பாடசாலைகளை நடத்து தொடர்பில் கல்வி அமைச்சு அவதானம் செலுத்தும் சாத்தியம் காணப்படுவதாக தெரியவருகிறது.

நாட்டில் கொரோனா தொற்றுப் பரவல் அத்துடன் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் பாடசாலைகள் சுமார் 2 வருடங்களுக்கு மேலாக இயங்கவில்லை .இதனால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: