நேர்முகப் பரீட்சை பிற்போடப்பட்டது – கல்வி அமைச்சு!

Wednesday, February 19th, 2020

தர்மாசிரியர் பரீட்சையில் சித்தியடைந்தவர்களை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யும் நேர்முகப் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

தவிர்க்க முடியாத காரணங்களினால் குறித்த நேர்முகப்பரீட்சை பிற்போடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.

நாட்டின் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் சமயப் பாடங்களைக் கற்பிப்பதற்காக நிலவும் ஆசிரிய வெற்றிடங்களை பூர்த்தி செய்வதற்காக, இலங்கை ஆசிரியர் சேவையின் இரண்டாம் தரத்தில் சேவையில் இணைத்துக்கொள்வதற்காக இந்த போட்டிப்பரீட்சை நடத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அதில் சித்தியடைந்தவர்களை எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 2 ஆம் திகதி வரை நேர்முகப்பரீட்சை நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், நேர்முகப் பரீட்சை நடாத்தப்படும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts: