நேரடி வரி அறவீட்டை 60 வீதம் குறைப்பதே உத்தேச வருமான வரி சட்டமூலத்தின் நோக்கம் – அமைச்சர் மங்கள !

Saturday, July 22nd, 2017

உத்தேச புதிய வருமான வரி சட்டமூலத்தின் முக்கிய நோக்கம் நேரடியான வரி அறவீடுகளை 60 வீதத்தால் குறைப்பதேயாகும் என்று நிதி மற்றும்  ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

உத்தேச புதிய வருமான வரி சட்டமூலத்தில் பொதுமக்களுக்கு சுமையாக உள்ள வரி விதிப்புக்கள் நீக்கப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் கூறினார்.

இந்த சட்டமூலத்தின் முக்கிய நோக்கம் நேரில் வரி அறவீடுகளை 60 வீதத்தால் குறைப்பதும், நேர் வரி அறவீடுகளை 40 வீதத்தால் குறைப்பதுமாகும். தற்சமயம் அமுலில் உள்ள வரி அறவீட்டு நடைமுறையின் படி நேரில் வருமானத்தில் 80 வீத அறவீடப்படுகிறது. நேர் வரி விதிப்பில் 20 வீத அறவீடும் மேற்கொள்ளப்படுகிறது. இதனால், குறைந்த வருமானம் ஈட்டும் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதனை கருத்திற்கொண்டே புதிய வரி அறவீட்டுக்கான சட்டமூலம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது என்று அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

2005ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சந்தைப் பொருளாதாரம் பொதுமக்களுக்கு நன்மையை பெற்றுத் தரவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Related posts: