நேபாளத்தில் விகாரைகளை புனர்நிர்மாணம் செய்யவுள்ளது இலங்கை!

625.0.560.320.160.600.053.800.668.160.90 Wednesday, January 11th, 2017

பூகம்பத்தினால் சிதைந்துபோன நேபாளத்திலுள்ள முக்கியமான இரண்டு விகாரைகளையும் புனர்நிர்மாணம் செய்வதற்கு இலங்கை அரசு தீர்மானித்துள்ளதாக நோபாளத்திற்கான இலங்கை தூதுவர் டபிள்யு.எஸ்.பெரேரா தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷின் புங்கமாட்டியில் உள்ள ராத்தோ மச்சிந்திரநாத் மற்றம் ஸ்வயம்புவில் உள்ள அனந்த குட்டி விகார் ஆகிய விகாரைகளே இவ்வாறு புனர்நிர்மாணம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேபாளத்தின் துணைப்பிரதமரான பிமலேந்திரா நிதியை சந்தித்த போதே நேபாளத்திற்கான இலங்கை தூதுவர் விகாரைகளின் புனர்நிர்மாணம் குறித்த இலங்கை அரசின் விருப்பத்தினை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நேபாளம் மற்றும் இலங்கைக்கு இடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பித்து 60 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு நடைபெறவுள்ள நிகழ்வுகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்ளவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

625.0.560.320.160.600.053.800.668.160.90


நாடாளுமன்றத்தில் குழப்பம்: தற்காலிகமாக ஒத்திவைப்பு!
குப்பி விளக்குச் சரிந்து தீப்பிடித்ததில் படுகாயமடைந்த இளம் குடும்பப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்...
நாடாளுமன்ற ஜனநாயகத்தை வலுவாக்க சுவிட்சர்லாந்து உதவி!
அடுத்த அமெரிக்க அதிபர் யார்? ட்ரம்ப் 168 - ஹிலரி 122!
அமெரிக்காவின் சிம்ம சொற்பனம் ஃபிடல் காஸ்ட்ரோ அமைதியடைந்தார்!