நெல் விலையை தீர்மானிக்கும் குழுவுக்கு விவசாய பிரதிநிதிகளை உள்வாங்க தீர்மானம் – விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!
Saturday, March 11th, 2023நெல் விலையை தீர்மானிக்கும் குழுவுக்கு மூன்று விவசாய பிரதிநிதிகளை உள்வாங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
விலையை தீர்மானிக்கும் குழுவில் தங்களது தரப்பும் இணைத்து கொள்ளப்பட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்தநிலையில் குறித்த குழுவில் 25 மாவட்டங்களின் விவசாய அமைப்புகளின் இணக்கப்பாட்டுக்கமைய மூவரை உள்வாங்குவதற்கு அமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
நெல்லை கொள்வனவு செய்வதற்காக அரசாங்கம் 10 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. தேவை ஏற்படுமாயின் மேலும் 10 மில்லியன் ரூபாவை அதற்காக ஒதுக்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
ஐரோப்பிய ஒன்றியத்தால் இலங்கைக்கு 8.5 மில்லியன் யூரோ வழங்க தீர்மானம்!
அர்ஜுன மகேந்திரன் விவகாரம்: தேவையான ஆவணம் சிங்கப்பூர் அரசிடம் கையளிப்பு!
பசுமை விவசாய கொள்கையிலிருந்து அரசாங்கம் பின்வாங்கவில்லை – அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவிப்பு!
|
|