நெல் விநியோகம் செய்வதில் ஏற்பட்டுள்ள தாமதமே  அரிசி விலை அதிகரிப்புக்கு காரணம்!

Wednesday, December 28th, 2016

நெல் கொள்வனவு சபையிடமுள்ள நெல்லை விநியோகம் செய்வதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக அரிசி விலை தற்போது அதிகரித்துள்ளதாக அரசி விற்பனையாளரான டட்லி சிறிசேன தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்துடன் தொடர்புடைய அமைச்சரின் அரசியல் தலையீடு காரணமாகவே நெல் விநியோகம் தாமதமடைந்துள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். நெல் கொள்வனவு சபையிடம் 2 இலட்சம் மெட்ரிக் தொன் நெல் உள்ளது. இந்த நெல்லை விநியோகம் செய்யுமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு ஜனாதிபதியும், பிரதமரும் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

இந்த நிலையில், அமைச்சரின் தனிப்பட்ட எண்ணத்தின் காரணமாக நெல் விநியோகம் தாமதப்படுத்தப்படுகின்றமையே அரசியின் விலை அதிகரிப்புக்கு காரணமாகியுள்ளது. நெல் கொள்வனவு சபையிடமுள்ள நெல்லை விநியோகிக்கும் பொறுப்பு தலைவருக்கும், பணிப்பாளருக்குமே உள்ளது.

ஆனால், அந்த தீர்மானத்தை எடுக்க அவர்களுக்கு இடமளிக்காது, அவர்களின் அதிகாரத்தை பறித்துள்ள சம்பந்தப்பட்ட அமைச்சர், நெல் விநியோகத்தை நிறுத்தியுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான நிலையில், அரசாங்கத்தின்வசமுள்ள நெல்லை அரிசியாக்கினால், ஒரு இலட்சத்து 30 ஆயிரம் தொன் அரிசியைப் பெறலாம் என்பதை நான் பொறுப்புடன் கூறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

rice-1 (1)

Related posts: