நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு சொந்தமான களஞ்சியசாலைகளில் இருந்து காணாமல்போன நெற் தொகுதி தொடர்பில் உடனடியாக அறிக்கை சமர்பிக்குமாறு வலியுறுத்து!
Tuesday, October 24th, 2023நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு சொந்தமான ஐந்து களஞ்சியசாலைகளில் இருந்து காணாமல் போன நெற் தொகுதி தொடர்பில் உடனடியாக அறிக்கை சமர்பிக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆலோசனை விவசாய அமைச்சரால் நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு வழங்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையை 3 நாட்களுக்குள் சமர்பிக்குமாறும் பணிக்கப்பட்டுள்ளது.
குருநாகல் மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு சொந்தமான ஐந்து களஞ்சியசாலைகளில் இருந்து பல கட்டங்களாக கொள்வனவு செய்யப்பட்ட நெல் காணாமல்போனமை தொடர்பில் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீரவிடம் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. இந்த முறைப்பாட்டுக்கமைய குறித்த அறிக்கை கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
29 மீனவர்கள் அதிரடிக் கைது : முல்லைத்தீவில் பதற்றம்!
கொவிட் பரவல் முற்றாக நீக்கவில்லை என்பதை மக்கள் நினைவில் வைத்து தமது நாளாந்த கடமைகளை முன்னெடுக்க வேண்...
நீதிமன்றங்களில் நீதிபதிகளின் வெற்றிடங்கள் அதிகரிப்பு - கவலையடைவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவ...
|
|