நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் உள்ள நெல்லை அரிசியாக்கி சந்தைக்கு விநியோகிப்பதற்கு இன்றுமுதல் நடவடிக்கை!

Sunday, June 12th, 2022

 

நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் உள்ள 43,000 மெட்ரிக் தொன் நெல்லை அரிசியாக்கி சந்தைக்கு விநியோகிப்பதற்கு இன்றுமுதல் நடவடிக்கை எடுப்பதாக அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய சதொச, கூட்டுறவு நிலையங்கள் மற்றும் சிறப்பு அங்காடிகள் ஊடாக நிவாரண விலையில் அரிசியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிவப்பு மற்றும் வெள்ளை கெக்குலு அரிசி ஒரு கிலோகிராம் 197 ரூபாவுக்கும், நாடு ஒரு கிலோ 199 ரூபாவுக்கும், சம்பா 205 ரூபாவுக்கும், கீரி சம்பா 215 ரூபாவுக்கும் கொள்வனவு செய்ய முடியும் என அவர் தெரிவித்தார்.

நுகர்வோருக்கு நிவாரண விலையில் அரிசியை வழங்கும் வகையில் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படுவதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

இதனிடையே

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரின் பணிப்புரையின் கீழ் யாழ்ப்பாண மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினரால் யாழ்ப்பாணம், திருநெல்வேலி பிரதேசத்தில்  30 இற்கு மேற்பட்ட வியாபார நிறுவனங்களில் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில் அரிசியை கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்த ஐந்து விற்பனை நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன் , நூடில்ஸ் மற்றும் பிஸ்கட் வகைகளை அதிக விலைக்கு விற்பனை செய்தமைக்காக இரண்டு விற்பனை நிலையங்களும் மொத்தமாக ஏழு வியாபார நிறுவனங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதென பாவனையாளர் அதிகார சபை உத்தியோகத்தர்களால் அறிக்கையிடப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும், தொடர்ச்சியாக வியாபார நிலையங்கள் பரிசோதனை, கண்காணிப்பு நடவடிக்கைகள் நடைபெறுமென அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: