நெல்லியடி பேருந்து நிலையத்திற்கான மின்சார துண்டிப்பு -திருட்டுக்கள் அதிகரிப்பு!
Saturday, December 1st, 2018நெல்லியடி பேருந்து நிலையத்தில் மின்சார விநியோகம் இரண்டு வாரங்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ளது.
பேருந்து நிலையத்திற்குரிய மின்கட்டணம் கட்டாத நிலையினால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை மலசலகூடத்திற்கு தண்ணீர் வசதியும் இல்லை. அத்தோடு இரவு நேரத்தில் பேருந்து நிலையத்திற்கு முன்பாக நிறுத்தப்படும் துவிச்சக்கர வண்டிகள் திருட்டுப் போவதாகவும் பொதுமக்களின் நன்மை கருதி உடனடியாக வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related posts:
பத்தரமுல்லை அரச அலுவலகங்களில் நெகிழ்வான அலுவலக நேரங்களுக்கு அமைச்சரவை அனுமதி!
டெங்கு பரவும் வகையில் சூழல் இருந்தால் நடவடிக்கை!
முல்லைத்தீவில் குண்டுவெடிப்பு: பல வீடுகள் சேதம்!
|
|