நெருங்கிய நண்பரொருவரை இழந்துவிட்டோம் – பிடல் கஸ்ட்ரோவின் மறைவு குறித்து ஜனாதிபதி!
Monday, November 28th, 201620 ஆவது நூற்றாண்டில் உருவான புரட்சியாளரான கியூபாவின் முன்னாள் ஜனாதிபதி பிடல் கஸ்ட்ரோவின் மறைவின் மூலம் இலங்கை நெருங்கிய நண்பரொருவரை இழந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது இரங்கல் செய்தியில் தெரி்வித்துள்ளார்.
பல்வேறு சவால்களுக்கு மத்தியில் கியூப மக்களின் நலனுக்காக தனது வாழ்க்கையை அர்பணிப்புச் செய்த சிறந்த வழிகாட்டியாக பிடல் கஸ்ட்ரோ திகழ்ந்ததாக ஜனாதிபதி புகழாரம் சூட்டியுள்ளார். இதேவேளை பிடல் கஸ்ட்ரோவின் மறைவையொட்டி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இரங்கல் செய்தியொன்றை விடுத்துள்ளார்.
1959 ஆம் ஆண்டு முதல் இலங்கையுடனான இராஜதந்திர உறவுகளை மேற்கொண்டு, சர்வதேச ரீதியில் பிடல் கஸ்ட்ரோ இலங்கைக்கு வழங்கிய ஆதரவு பாராட்டத்தக்கது என அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
மாணவிகள் துஷ்பிரயோகம்: பெரியபுலவு மகா வித்தியாலய பாடசாலை சூழலில் பதற்றம்!
மின்தடைக்கு நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலைய குறைபாடே காரணம்!
தனியார் பேருந்துகளில் அமுலுக்கு வரும் வகையில் புதிய சட்டம்!
|
|